காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று மதியம் அங்கு செல்வதாக இருந்தனர்.
கூட்டணிக்குள் இருந்துகொண்டே அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து தலைவர்கள் பேசுவது, எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவல் கிடைத்ததுபோல ஆகிவிடும்.
இந்த நிலையில் சங்கத் தலைவர்களை நேற்று இரவோடு இரவாக காவல்துறை கைதுசெய்தது. அது பெரும் சர்ச்சையாக ஆன நிலையில், சி.ஐ.டி.யு. தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தாராசன், மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் உட்பட்ட தலைவர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றனர்.
அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி, காவல்துறையினர் கட்டாயப்படுத்தினர். தனியார் இடத்தில் கூடுவது அரசமைப்புச் சட்டப்படி தங்கள் உரிமையென கூடியிருந்த சாம்சங் தொழிலாளர்கள் அவர்களிடம் வாதிட்டனர்.
தள்ளுமுள்ளுவில் இரண்டு தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர்.
நிலைமை மோசமடையவே, அவர்கள் அனைவரும் காவல்துறை படையினர் குவிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டனர்.
இதனிடையே, தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைதி வழியில் போராடியபோது கைதுசெய்யப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், காவல்துறை அவர்களைக் கைதுசெய்யவில்லை என அரசுத் தரப்பு மறுத்தது.
ஆனால், இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.