ரேஷன் அட்டை 
தமிழ் நாடு

தேர்தல் முடிவுக்குப் பிறகு 2 லட்சம் புதிய குடும்ப அட்டைகள்!

Staff Writer

புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இவற்றிற்கு உணவுப் பொருட்கள் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இதுவரை புதிய குடும்ப அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி தொடங்கும் என்றும் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றபின்னர் புதிதாக 2 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றும் உணவுவழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.