தலைமைச் செயலகம் 
தமிழ் நாடு

தொடரும் ஐ.பி.எஸ். மாற்றங்கள்- இன்று 17 பேர்... யார்யார்?

Staff Writer

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 16ஆம் தேதி அரசுத் துறைகளைச் சேர்ந்த 51 ஐஏஎஸ் அதிகாரிகளுடன், 10 மாவட்ட ஆட்சியர்கள் நான்கு மாநகராட்சிகளைச் சேர்ந்த ஆணையர்கள் என மொத்தம் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் காவலர் வீட்டு வசதிக் கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த இருந்த தினகரன் அதே துறையின் ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானீஸ்வரி காவல் துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஐஜியாக இருந்த சாமுண்டீஸ்வரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமாரி, குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய ஐஜியாக மகேந்திர குமார் ரத்தோட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடசென்னை சட்ட ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ் குமார் மாற்றப்பட்டுள்ளார்.

வேலூர் சரக டிஐஜியாக தேவராணியும் ராமநாதபுரம் சரக டிஐஜியாக அபினவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்

ரயில்வே டிஐஜியாக அபிசேக் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக நஜ்முல் ஹூடா நியமிக்கப்பட்டுள்ளார்.

காவலர் நலவாழ்வு தலைமையிட டிஐஜியாக துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் சரக டிஐஜியாக தேவராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையாராக சரோஜ் குமார் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram