எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

133 அறிவிப்புகள்… அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு!

Staff Writer

மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு 133 அறிவிப்புகள் அடங்கிய அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:

  • உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

  • வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்படும்

  • நூறு நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படுவதோடு, ஊதியம் ரூ. 450 வழங்கப்படும்.

  • குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வேண்டும்

  • மகளிர் உரிமைத் தொகையை ரூ. 3,000 – ஆக உயர்த்த வலியுறுத்துவோம்.

  • மருத்துவ படிப்பில் நீட் தேர்வுக்குப் பதிலாக மாற்றுத் தேர்வு முறை அறிவிக்கப்படும்

  • உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்க நடவடிக்கை

  • கச்சத்தீவு மீட்பு

  • இருசக்கர வாகனங்களுக்குத் தனிப்பாதை அமைத்தல்

  • மருத்துவ பணியாளர்களுக்குத் தனி வாரியம்

  • வகுப்புவாரி பாதுகாக்கப்பட வேண்டும்

  • பெட்ரோல், டீசல் விலையை மத்தியே அரசே நிர்ணயிக்க வேண்டும்

  • சமையல் எரிவாயு விலை குறைக்க வேண்டும்

  • நெகிழி பொருட்களுக்கு நிரந்தர தடை

  • இலங்கை தமிழர்களுக்கு இரட்டை வாக்குரிமை

  • நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அகற்றப்படும்