சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 
செய்திகள்

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்துவர தடை – எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

Staff Writer

“பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை, ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்” மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மாணவர்களுக்கு நேற்றி சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ”பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் அவர்களின் தலைமையில் பட்டமளிப்பு 28.06.2023 விழாவில் அன்று சிறப்பாக கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்துவருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடசேன் செய்துள்ள ட்வீட்டர் பதிவில், “ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.