இலங்கை 
இலங்கை

அதிபருக்கு அதிர்ச்சி தந்த இலங்கைக் கருத்து கணிப்பு!

Staff Writer

இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை - மாலத்தீவுகளுக்கான ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவின் சார்பில் இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கணிசமான வாக்கு முடிவு வித்தியாசங்கள் காணப்படுவதாக அந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுர குமார திசநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிக வரவேற்பு காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுர குமாரவுக்கு 53 சதவீதம் ஆதரவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு 24 சதவீதமும் ஆதரவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர், சிங்களர் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதி மக்களிடமும் எடுக்கப்பட்டுள்ள இந்தக் கருத்துக்கணிப்பில், தற்போதைய அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே காணப்படுகிறது என்றும் மகிந்த இராஜபக்சே தலைமையிலான இலங்கை பொது மக்கள் முன்னணிக்கு 6 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ரணில் விக்ரமசிங்கேவும் மகிந்த ராஜபக்சேவும் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.