நாகை – இலங்கை கப்பல் சேவை 
இலங்கை

நாகப்பட்டினம் - இலங்கை கப்பல் சேவை அதிகரிப்பு!

Staff Writer

நாகப்பட்டினத்துக்கும் வட இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 21ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 16ஆம் தேதி சிவகங்கை என்கிற கப்பல் மூலம் தொடங்கப்பட்ட இந்தக் கப்பல் போக்குவரத்து, முதலில் அன்றாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால் வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே கப்பல் சேவை இயக்கப்படும் என மாற்றப்பட்டது.

அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாள்களில் இந்தக் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதால், வரும் 21ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு கப்பலை இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம்வரை மூன்று நாள்களுக்கு இயக்கப்படும். அடுத்த வாரம் முதல் சனிக்கிழமையும் காங்கேசன்துறை கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.