அனுரகுமார திசநாயக்கா 
இலங்கை

இலங்கை கடல் பகுதிகளில் தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை! – திசநாயக்கா திட்டவட்டம்

Staff Writer

“இலங்கை கடல் பகுதிகளில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை. மேலும் இலங்கை அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலம் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்” என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்கா தெரிவித்துள்ளார்.

அதிபராக கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்ற அனுரகுமார திசநாயக்கா முதல்முறையாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அவரது ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணிக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் அவா் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு சொந்தமான கடல்சாா் வளங்களை இந்திய மீனவர்கள் அழித்து வருகின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் இந்திய மீனவா்களை தடுத்து இலங்கை மீனவா்களின் உரிமைகளை அரசு நிலைநாட்டும் என உறுதியளிக்கிறேன்.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் நலனை பாதுகாக்க இரு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவுள்ளது. ஒன்று, அரசு மற்றும் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழா்களின் நிலங்கள் விரைவில் அதன் உரிமையாளா்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்படும். இரண்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவா்.

மேலும், தமிழா்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மாகாண தேர்தல்களும் விரைவில் நடத்தப்படும்.” என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram