இலங்கை காவல்துறை 
இலங்கை

இலங்கையில் ஊரடங்கு, ஒரு வாரத்துக்கு பேரணிகளுக்குத் தடை!

Staff Writer

அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள இலங்கையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு கொண்டுவரப்படுவதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன், அதிபர் தேர்தல் முடிவு வெளியாகும்போதும் அதற்குப் பிறகும் அடுத்த ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும் எந்த இடத்திலும் நடைப் பயணமாகவோ வண்டிகளுடனோ பேரணியாகச் செல்லக்கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது. 

இந்தக் காலகட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை உதவி ஐ.ஜி. நிகால் தல்துவ கூறியுள்ளார்.  

பொதுவாக இன்றைய தேர்தலின்போது பெருமளவிலான வன்முறைச் சம்பவங்கள் நிகழவில்லை என்பதை பல தரப்பினரும் நல்லவொரு அறிகுறியாகவே பார்க்கின்றனர்.