இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றுமுறை அதிபராக அனுரகுமார திசநாயக்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐம்பது சதவீதம் வாக்குகளை யாரும் பெறாதநிலையில், இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
முன்னதாக, அனுரகுமார திசநாயக்கா 56 இலட்சத்து 34ஆயிரத்து 915 (42.31%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இரண்டாம் சுற்றில்1,05,264 விருப்ப வாக்குகளைப் பெற்றார்.
மொத்தம், 57 இலட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளைப் பெற்று அதிபர் தேர்தலில் அனுர வெற்றிபெற்றுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசா முதலில் 43 இலட்சத்து 63ஆயிரத்து 35 (32.8%) வாக்குகளைப் பெற்றிருந்தார்.
1,67,867 விருப்பவாக்குகளையும் சேர்த்து 45 இலட்சத்து 30 ஆயிரத்து 902 வாக்குகளைப் பெற்று வெற்றியைக் கோட்டைவிட்டார்.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுர, நாளை பதவியேற்றுக்கொள்வார் என்று அவருடைய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.