விராட் கோலி 
விளையாட்டு

இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலம் யார்…?

Staff Writer

கிரிக்கெட் ரசிகர்களால் ‘ரன் மெசின்’ என்று அழைக்கப்படும் விராட் கோலி, இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் விராட் கோலி. அவரின் பேட்டிங் ஸ்டைலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர் என்ற பெருமைக்கும் விராட் கோலி சொந்தக்காரர். இவரின் இன்ஸ்டாகிராமை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 270 மில்லியன் ஆகும்.

இப்படி விளையாட்டிலும் அதற்கு வெளியிலும் அனைவரின் மனம் கவர்ந்தவராக இருக்கும் விராட் கோலி, தற்போது இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார்.

பிராண்டு மதிப்புகளின் அடிப்படையில் விராட் கோலி இந்த பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நிலையில், ரன்வீர் சிங் இரண்டாவது இடமும், ஷாருக் கான் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 176.9 மில்லியன் டாலர் இருந்த நிலையில், தற்போது அது 29 சதவிகிதம் அதிகரித்து 227.9 மில்லியன் டாலர் வரை உயர்ந்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலியைத் தொடர்ந்து பிராண்ட் மதிப்பின்படி 203.1 மில்லியன் டாலர் பெற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இரண்டாவது இடமும், ஷாருக் கான் 120.7 மில்லியன் டாலர் பெற்று மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 95.8 மில்லியன் டாலர் உடன் ஏழாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 91.3 மில்லியன் டாலர் உடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram