திலக் வர்மா 
விளையாட்டு

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் 3வது டி20; டாப் 5 வீரர்கள்!

Staff Writer

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியுற்றது. இதனால், தொடரில் 2-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 3வது டி-20 போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணியும், அதை தடுக்க இந்திய அணியும் தீவிரம் காட்டும் என்பதால், போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு நடைபெற உள்ள போட்டியில் டாப் 5 வீரர்கள் யார் என்று பார்ப்போம்.

திலக் வர்மா

20 வயதான திலக் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவரது பேட்டிங் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாந்ததது என்பதை நிரூபித்து வருகிறார். நெருக்கடியான நிலையில் கூட சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்கக் கூடியவராக உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சாளர்களுக்கு சவால் நிறைந்தவராக திலக் வர்மா இருப்பார்.

சாஹல்

லெக் ஸ்பின்னரான இவர் தன்னுடைய சாமர்த்தியமான பந்துவீச்சால், பேட்ஸ்மேன்களை திணறடிக்கலாம். ஒரே ஓவரில் போட்டியின் போக்கை மாற்றக்கூடியவர் என்பதால், இந்த போட்டியில் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

இஷான் கிஷான்

விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் சமீபகாலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை குவித்துத் தருவதோடு, தொடக்க வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார்.

நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்திய தீவின் பேட்ஸ்மேனான இவர், இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி 67 ரன்களை குவித்தார். சிக்ஸர்களை மிக எளிதாக அடிக்க கூடியவர், ஸ்ட்ரைக் ரேட்டும் நன்றாக உள்ளது. அவரை களத்திலிருந்து வெளியேற்றுவது இந்திய அணிக்கு கடினமான காரியம்.

ஷிம்ரோன் ஹெட்மியர்

பேட்ஸ்மேனாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் களத்தில் நின்றால் எத்திரணிக்கு ஆபத்துதான்.