பி.வி.சிந்து 
விளையாட்டு

மிஸ் பண்ணிட்டீங்களே பி.வி.சிந்து!

Staff Writer

ஹாட்ரிக் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறினார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியாவுடன் நேற்றிரவு பலப்பரீட்சை நடத்தினார் சிந்து.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் சுற்றில் 19- 19 என்று சமநிலையில் இருந்த சிந்து கடைசி நேரத்தில் கோட்டை விட்டார்.

இரண்டாவது செட்டில் அவரால் பிங் ஜியாவின் ஷாட்டுகளை சமாளிக்க முடியாமல் திணறினார். 56 நிமிடம் நடந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 19 -21, 14- 21 என்ற நேர் செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும் 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றிருந்த சிந்து ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளார்.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பிங் ஜியாவை வீழ்த்தியே சிந்து வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. இருவரும் இத்துடன் 21-ஆவது முறையாக சந்தித்த நிலையில், சிந்து 10-ஆவது தோல்வியை சந்தித்துள்ளார்.

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் மட்டுமே எஞ்சியுள்ளார். பாட்மிண்டனில் இந்தியாவுக்கான பதக்கத்தை (ஆண்கள் பிரிவில்) அவர் உறுதி செய்வார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram