மும்பை வான்கடே மைதானத்தில் திறக்கப்பட உள்ள சச்சின் டெண்டுல்கரின் உருவசிலை. 
விளையாட்டு

மும்பை வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு சிலை!

Staff Writer

மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் சிலை நாளை திறக்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், கடந்த ஏப்ரல் மாதம் தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் சச்சினின் முழு உருவச்சிலை, மும்பை வான்கடே மைதானத்தில் நாளை திறக்கப்பட உள்ளது. சிலையை நிறுவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாளை நடைபெறும் இந்த சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த சிலை திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்கிறார்.

இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு நடந்த, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், சச்சின் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.