அஸ்வின் 
விளையாட்டு

சொந்த மண்ணில் சதம் அடித்து அசத்திய அஸ்வின்... இந்தியா - வங்கதேச டெஸ்ட்!

Staff Writer

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவருடைய நூறாவது டெஸ்ட் போட்டியாகும்.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – ரோகித் சர்மா ஜோடி களமிறங்கினர். ரோகித் சர்மா 6 ஆட்டமிழக்க அடுத்த இறங்கிய சுப்மன் கில்லும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் 56 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலி 6 ரன்னிலும் ரிஷப் பண்ட் 39 ரன்னிலும் கே.எல். ராகுல் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களுக்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா, அஸ்வின் நிலைத்து நின்று ஆடி வருகின்றனர்.

ஜடேஜா 86 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அஸ்வின் சதம் அடுத்து அசத்தியுள்ளார். நூறாவது டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் சதம் அடித்துள்ள அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இந்திய அணி 80 ஓவருக்கு 6 விக்கெட் இழப்புக்கு339 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜடேஜாவும் – அஸ்வினும் ஆடிவருகின்றனர்.

வங்கதேசம் தரப்பில் ஹாசன் முகமது 4 விக்கெட்டுகளையும் ரானா, மிராஸ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram