கிரீன் பார்க் ஸ்டேடியம் 
விளையாட்டு

இந்தியா – வங்கதேசம் 2ஆவது டெஸ்ட்: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து!

Staff Writer

இந்தியா - வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நடைபெற்ற நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்வதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் இதோடு ரத்து செய்யப்பட்டது.

முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான வங்கதேச ரசிகரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போலீசார்

வங்கதேச ரசிகர்கள் மீது தாக்குதள்

இந்தியா – வங்கதேசம் இடையேயான போட்டியைக்காண வங்கதேசத்தில் இருந்து ‘சூப்பர் ஃபேன்’ டைகர் ராபி என்பவர் புலி வேடமணிந்து வந்துள்ளார். இந்திய அணி ரசிகர்கள் அவரிடம் இருந்து வங்கதேச கொடியைப் பிடுங்கி எறிந்து விட்டு அவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராபியை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ராபியும் இந்திய ரசிகர்கள் மீது குற்றச்சாட்டு வைத்ததன் பேரில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram