உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நுழைந்த இந்திய அணி 
விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இந்தியா!

Staff Writer

உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா 397 ரன்களைக் குவித்தது. கோலி 117, ஸ்ரேயாஷ் ஐயர் 105, ஷுப்மன் கில் 80 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி போராடி தோற்றது. 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர்ரகளான கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் அதிரடியாக இறுதி வரை போராடி 134 ரன்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 69, பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சிராஜ், பும்ரா, குல்தீப் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதன்மூலம் முதல் அணியாக உலகக் கோப்பை 2023இன் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தேர்வாகியுள்ளது. நாளை ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் 2வது அரையிறுதியில் மோத உள்ளன.