ஹுவாங் யாகியாங்கிடம் காதலை தெரிவிக்கும் லியூ யூசேன் 
விளையாட்டு

சில்லென உரசிய காதல்... ஒலிம்பிக்கில் ஓஹோ!

Staff Writer

பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன பேட்மிட்டன் வீராங்கனையிடம் சக வீரர் ஒருபர் காதலை சொன்ன நிகழ்வு சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

பரபரப்பாக நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஒவ்வொரு நாளும் ஒரு சூடான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படி ஒரு சம்பவம்தான் இது.

சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யாகியாங். பேட்மிட்டன் வீராங்கனையான இவர், நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 

பதக்கம் வென்ற உற்சாகத்தில் இருந்த ஹுவாங்கிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த பூங்கொத்துவை ஹுவாங் யாகியாங்கிடம் கொடுத்தார். பின்னர், மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.

இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார். பின்னர் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த மோதிரத்தை எடுத்து ஹுவாங் யாகியாங்குக்கு அணிவித்தார்.

இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதே ஒலிம்பிக் தொடரில் ஹுவாங்கின் காதலரான லியு யுசென்னும் பங்கேற்றிருந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட அவர், முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram