தங்கப் பதக்கம் வென்ற சாம்ரா கவுர் 
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!

Staff Writer

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் இன்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

மகளிருக்கான 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற மனு பேக்கர், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அடங்கிய மூவர் அணி 1,759 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

அதேபோல், 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற சாம்ரா கவுர், ஆஷி சௌக்சி மற்றும் மனினி கௌஷிக் அணியினர் 1,764 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இதில், சாம்ரா கவுர், ஆஷிக் செளக்சி இருவரும் முதல் ஆறு இடங்களுக்குள் இருந்ததால், தனி வீரர்களுக்கான இறுதிப் போட்டியில் முன்னேறி இருந்தார்கள்.

இறுதிப் போட்டியின் 50 மீட்ட துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், சாம்ரா 451.9 புள்ளிகள் புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். ஆஷி செளக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் 5 தங்கப் பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா உள்ளது.