அமன் செராவத் 
விளையாட்டு

அடடா அமன்... 6ஆவது பதக்கம் இந்தியாவுக்கு!

Staff Writer

பிரான்சின் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவில் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது.

 இதில் ஆண்களுக்கான 57 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் நேற்று பின்னேரம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் அமன் செராவத் போட்டோரிகா வீரர் பேரியன் குருசை எதிர்கொண்டார்.

போர்டோரிக்க வீரரின் கால் பிடிக்குள் எளிதில் சிக்காமல் அவரை எல்லைக்கோட்டுக்கு வெளியே தள்ளி விடுவதிலேயே அமன் தீவிர கவனம் செலுத்தினார். இதன் மூலம் ஏழு புள்ளிகளைச் சேர்த்த அவர் ஒரு கட்டத்தில் பேரியனின் காலை இலாவகமாக மடக்கி கூடுதல் புள்ளிகளைச் சேர்த்தார்.

ஆட்டத்தின் நிறைவாக 13-5 எனும் புள்ளிக் கணக்கில் பேரியனை வீழ்த்தி அமன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த ஆறாவது பதக்கம் இது. 

முன்னதாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும்  ஹாக்கிப் போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram