அமைச்சர் செந்தில் பாலாஜி 
செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்- அமலாக்கத் துறை சொல்வதென்ன?

Staff Writer

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

பணப் பரிவர்த்தனை மோசடி தடுப்புச் சட்டத்தின்படி, அமலாக்கத் துறை அமைச்சர் செந்த்ல் பாலாஜி மீது வழக்கு பதிந்து, விசாரணையைத் தொடங்கியது. இதையொட்டி கடந்த மே 14ஆம் தேதியன்று அவரின் வீடு, அலுவலகங்கள் உள்பட பலரின் இடங்களையும் அமலாக்கத் துறை சோதனையிட்டது. அத்துடன் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதும்செய்யப்பட்டார்.

பின்னர், அவரின் உடல்நிலை மோசமாகி, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் 5 நாள்கள் காவலில் எடுத்தும் விசாரிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மீதான வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இன்று தன் அறிக்கையை முன்வைத்தது. அதில், செந்தில்பாலாஜி விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என்றும் கேள்விகளுக்கான விளக்கத்தை அவர் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வரும் 28ஆம் தேதியன்று சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.