சுனில் கவாஸ்கர்  
செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி; புஜாரா பலிகடாவா? கவாஸ்கர் காட்டம்!

Staff Writer

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானேவை தவிர மற்ற எல்லா பேட்ஸ்மேன்களும் மோசமாகவே ஆடினார்கள். ஆனால், புஜாராவை பலிகடா ஆக்கியுள்ளது பிசிசிஐ என சுனில் கவாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது. இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே காரணம். இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் புஜாரா நீக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தோல்விக்கு காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததே காரணம். ரஹானே தவிர மற்ற எந்த வீரரும் ஒழுங்காக விளையாடவில்லை. ஆனால் தற்போது புஜாராவை மட்டும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியுள்ளார்கள். அவரை தவிர மற்றவர்களை அணியில் தேர்வு செய்ததற்கான தகுதிகள் என்னென்ன? பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாமல் போனதற்கு புஜாராதான் பலியாடா? அவர் இந்திய கிரிக்கெட்டின் விசுவாசி.

புஜாரா கவுண்டி கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதிகமாக டெஸ்ட் போட்டிகளையும் விளையாடியுள்ளார். வீரர்கள் 30வயது முதல் 40 வயது வரைக்கும் விளையாடலாம். உடல்நிலை சரியாக இருக்கும்வரை விளையாடுவது தவறில்லை. ரன்கள் அடிக்கும்வரை விக்கெட்டுகள் எடுக்கும்வரை வயது காரணமில்லை. எந்த சமூக வலைதளத்திலும் அவர் இல்லாதது குறித்து சத்தம் எழவில்லை. ஏனெனில் அவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இல்லை என விமர்சித்துள்ளார்.