ஆதித்யா எல் 1 படம்பிடித்து அனுப்பிய சூரியன் இயக்கம் 
இந்தியா

சூரியப் புயல்களைப் படம்பிடித்து அனுப்பிய ஆதித்யா எல்-1

Staff Writer

சூரியனிலிருந்து வந்த புயல்களை இந்தியாவின் ஆதித்யா- எல்1 விண்கலம் அருமையாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்-இஸ்ரோவின் எக்ஸ் பக்கத்தில் இப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஆதித்யா எல் 1 படம்பிடித்து அனுப்பிய சூரியனின் மே 17 இயக்கம்
ஆதித்யா எல் 1 படம்பிடித்து அனுப்பிய சூரியனின் மே 17 இயக்கம்

சூரியனின் புறப்பகுதிகளைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று ஆதித்யா விண்கலம் அனுப்பப்பட்டது. 125 நாள்கள் பயணத்தைக் கடந்து கடந்த ஜனவரியில் அது பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட எல்1 எனும் இலாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. 

ஆதித்யா எல் 1 படம்பிடித்து அனுப்பிய சூரியனின் மே 17 இயக்கம்

அங்கிருந்தபடியே ஆதித்யா விண்கலத்தின் பல கருவிகள் சூரிய ஆய்வில் ஈடுபட்டுவருகின்றன.  

அண்மையில், சூரிய வெடிப்பு குறித்த படங்களை விண்கலம் அனுப்பியிருந்தது. 

அதையடுத்து, போன மாதம் சூரியன் இயங்குவதைப் பற்றிய படங்களை ஆதித்யா எல்1 அனுப்பியுள்ளது. 

ஆதித்யா எல் 1 படம்பிடித்து அனுப்பிய சூரியனின் மே 17 இயக்கம்

சூரியனின் காந்தப் பகுதிகளைத் தெளிவாகப் பிடித்து அனுப்பியிருக்கிறது, ஆதித்யா விண்கலம். 

சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT), விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC - Visible Emission Line Coronagraph) ஆகியவை மூலம் இந்தப் படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.