குழந்தைகளின் ஆபாசப் படங்களை செல்போனில் பார்த்ததற்காக, சென்னை அம்பத்தூரில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதற்காக அவர் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் தீர்ப்பளித்த ஆனந்த் வெங்கடேஷ், குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பது தவறு அல்ல; மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என்று அவரை விடுவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று அவ்வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா அமர்வு தீர்ப்பளித்தது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேசின் தீர்ப்பை ரத்துசெய்த உச்சநீதிமன்றம், குழந்தைகள் ஆபாசப் படத்தை செல்போனில் பார்ப்பது மட்டுமல்ல; அதை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம்தான்; குழந்தை ஆபாசப் படம் எனும் சொல்லை உயர்நீதிமன்றம் பயன்படுத்தக்கூடாது எனக் கூறியுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றம், சுரண்டல் எனும் அவசர சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.