காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் வினேஷ் போகத், கே.சி. வேணுகோபால் 
இந்தியா

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பங்ரங் புனியா, வினேஷ் போகத்!

Staff Writer

முன்னாள் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர்.

அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் இருவரும் களமிறக்கப்படலாம் என யூகங்கள் வெளியான நிலையில், அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா மறுத்திருந்தார்.

இதற்கிடையே, வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினர். இதனால், அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, வினேஷ் போகத் ரயில்வே பணியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்தாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் முன்னிலையில், முன்னாள் மல்யுத்த வீரர்கள் பங்ரங் புனியா, வினேஷ் போகத் இருவரும் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இருவரும் அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram