பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியராகவும் இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித்தொகை பெறவும், முனைவர் பட்ட ஆராய்ச்சி சேர்க்கைக்கும் 'நெட்' தகுதித்தேர்வு அவசியம்.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) சார்பில் ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் மாதங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பேர் எழுதினர்.
ஆனால் நீட்டைப் போல இதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன. பலத்த எதிர்ப்பையடுத்து மொத்தத் தேர்வையே ரத்துசெய்வதாக மைய அரசு அறிவித்தது.
இந்நிலையில் மறுதேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
வரும் 21ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை கணினி வாயிலாக 83 பாடங்களுக்கு நெட் தேர்வு நடத்தப்படும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு குறித்த விவரங்களை பட்டதாரிகள் ugcnet. nta.nic.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். துள்ள
கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று ம் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.