மாதிரிப்படம் 
இந்தியா

கிளம்பலாங்களா...? ஆஃபர் கொடுக்கும் 5 நாடுகள்!

Staff Writer

ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் இந்தியர்களுக்கு நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்தை எளிமையாக வழங்குகின்றன.

வளர்ந்து வரும் பொருளாதாரம், தொழில்முனைவோர் கனவு போன்றவற்றால் வெளிநாடுகளில் நிரந்த குடியிருப்பாளர் அந்தஸ்தைப் பெற வேண்டும் ஆசை பலருக்கும் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2014லிருந்து 2018ஆம் ஆண்டுக்குள் மட்டும் 23,000-க்கும் மேற்பட்ட இந்திய கோடீஸ்வரர்கள் குடியுரிமைத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 6,500 பணக்காரர்கள் மேய்ச்சல் நிலங்களை தேடுவார்கள் என்று கணித்துள்ளது மற்றொரு நிறுவனம்.

இந்த நிலையில், உலக குடிமகனாக அடையாளம் காண விரும்பும் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் 5 நாடுகளில், நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்த்தை பெறுவதற்கான வழிகளும் எளிமையாகியுள்ளன.

இந்தியர்களுக்கு குடியேற நினைக்கும் ஐந்து நாடுகள் எதுவென்று பார்ப்போம்.

ஆஸ்திரேலியா

சூடான கடற்கரைகள், துடிப்பான பன்முக கலாச்சாரத்துக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலியா, குடியேற நினைப்பவர்களின் முதல் நாடாக உள்ளது. மாணவர்கள், தற்காலிக தொழிலாளர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப சில நெறிமுறைகளுடன் விசா வழங்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து வந்து அங்குப் படிக்கும் மாணவர்களுக்கு, படிப்பிற்குப் பின்னர் அங்கு வேலைப்பார்த்தால் அவர்களுக்கு குடியிருப்பாளர் அந்தஸ்து எளிமையாகக் கிடைக்கும் என்கிறனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எந்தவொரு முதலாளியும் நிரந்தர வசிப்பிடத்திற்கு திறன்மிகு தொழிலாளர்களைப் பரிந்துரைப்பது எளிமையாகும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

உலக நிதி மையமாகவும், மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவும் பெயர் பெற்ற சிங்கப்பூர், இந்தியர்கள் விரும்பும் மற்றொரு நாடாகும்.

தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் திட்டம், மில்லியன் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கான உலகளாவிய முதலீட்டாளர் திட்டம் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கான வெளிநாட்டுக் கலைத் திட்டம் மூலம் இங்கு நிரந்த குடியிருப்பாளர் அந்தஸ்தைப் பெறலாம்.

கனடா

பன்முக கலாச்சாரத்துக்கு முன்னுதாரணமாகத் திகழும் கனடா, குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய குடிமக்களை நிரந்தர குடியிருப்பாளர்களாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது.

வலுவான பொருளாதாரம் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவற்றால் அங்கு சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டிற்குள் 10 லட்சம் பேரை கனடா குடியேற்றிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனி

தானியங்கு தொழில்துறை, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ள ஜெர்மன் குடியேறுபவர்களின் தேர்வு பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் உள்ளது. வேலைக்கான விசா, வேலை தேடல் விசா, மாணவர்களுக்கான விசா மற்றும் விருந்தினர் விஞ்ஞானிகளுக்கான விசா என இப்படி நேரடியாக விசா வழங்கும் முறையை ஜெர்மனி கொண்டுள்ளது.

நியூசிலாந்து

இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகளுக்கும் துடிப்பான கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற நியூசிலாந்து, சர்வதேச மாணவர்கள் விரும்பும் நாடாக உள்ளது. பல்வேறு வகையான குடியேற்ற விசாக்களை இந்த நாடு வழங்குகிறது. பார்வையாளர் விசா, மாணவர் விசா, வேலைக்கான விசா மற்றும் குடியிருப்பாளர் விசா என பல்வேறு வகையான குடியேற்ற விசாக்களை வழங்குகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு படிப்புக்கு பிந்தைய வேலை, நிரந்தர குடியிருப்பாளர் வசதிகளும் கிடைக்கின்றன.

தகவல்: TimesTravel

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram