லட்டுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் பால் பண்ணை 
இந்தியா

நெய் வழங்கிய தமிழக பால் பண்ணையில் ஆய்வு... அவர்கள் தரும் விளக்கம்!

Staff Writer

திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல் பால் பண்ணையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வில் ஈடுபட்டனர். அந்த பண்ணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் மாதிரியையும் லட்டுக்கான நெய் மாதிரியையும் அவர்கள் எடுத்துக்கொண்டனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்துக்கு இவற்றை அனுப்பிவைக்க உள்ளதாகவும் அதன் முடிவு தெரிந்தபின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏஆர் டெய்ரி புட் என்கிற அந்த பால் பண்ணையின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவினர், “நாங்கள் 25 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறோம். பல்வேறு நிறுவனங்களுக்கு நெய்யை வழங்கிவருகிறோம். கடந்த ஜூன், ஜூலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 4 வண்டிகள் நெய் வழங்கினோம். அதற்கு முன்னர் வழக்கம்போல அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனைசெய்து பார்க்கப்பட்டது. அப்போது எந்தப் புகாரும் இல்லை. இப்போது தேவஸ்தானம் கொள்முதலை நிறுத்திவிட்டதும் உண்மை.” என்று கூறினர்.

இந்திய உணவுப் பதப்படுத்தல், தரப்படுத்தலுக்கான ஆணையத்தின் சார்பில் அவ்வப்போது நெய் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறினர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram