அவசர சிகிச்சைப் பிரிவு 
இந்தியா

பக்தி இருக்க வேண்டியதுதான்; அதற்காக இப்படியெல்லாமா?

Staff Writer

பக்தி இருக்க வேண்டியதுதான்; அதற்காக இப்படியெல்லாமா? கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்கிறேன் என, 33 வயது இளைஞர் செய்த காரியம் பதைபதைக்க வைக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் லலித்பூரை அடுத்துள்ள ரகுநாதபுரத்தை சேர்ந்தவர் தீபக் குஷ்வாஹா. இவர், கடந்த செவ்வாய் கிழமையன்று, அதிகாலை நான்கு மணிக்கு, தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

யாருக்கும் தெரியாமல், மின்சார இரம்பத்தால் தன்னுடைய கழுத்தை அறுக்கத் தொடங்கியவர், வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள், ஓடி வந்து தடுத்துள்ளனர்.

உடனே, தீபக்கை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் ஜான்சி மருத்துவக் கல்லூரி மற்றியுள்ளனர். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருவதாகக் காவல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபக் நியை நோட்டு புத்தகம் வைத்திருப்பதாகவும், அதில் சிவனை பற்றி பக்கம் பக்கமாக எழுதி வைத்திருப்பதாகவும், அதிலொரு குறிப்பில், தன்னுடைய தலையை சிவனுக்கு கொடுப்பதாகவும் எழுதி வைத்திருக்கிறார்.

தீபக், தீவிர பக்தியால் இதை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரித்து வந்தாலும், அந்த இளைஞரின் பக்தி ஆபத்தானது.