சீதாராம் யெச்சூரி  
இந்தியா

யெச்சூரிக்கு செயற்கைச் சுவாசம்- தீவிர சிகிச்சை தொடர்கிறது!

Staff Writer

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரிக்கு செயற்கைச் சுவாசம் அளிக்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த மாதம் 19ஆம் தேதி தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்- எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொற்று காரணமாக நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டு அவதிப்பட்டதால், அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மருத்துவக் குழு அவருக்கு இன்று காலையில் செயற்கைச் சுவாசம் அளிக்கத் தொடங்கியது. பல துறை மருத்துவர்களும் அவரின் உடல்நிலையை கவனித்துவருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெச்சூரியின் உடல்நிலை நெருக்கடியான கட்டத்தில் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.