அருணாச்சலப்பிரதேசம் 
இந்தியா

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் நாளை தேர்தல்!

Staff Writer

நாடாளுமன்ற மக்களவைக்கான முதல் கட்டத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, திரிபுரா மாநிலம் இராம்நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலும் மக்களவைத்தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. 

அத்துடன் சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

சிக்கிம்

இரண்டு மாநிலங்களிலும் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 28ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 30ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டது. 

சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அருணாச்சலப்பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறுகிறது. 

இதையடுத்து, ஆந்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைகளுக்கும் மே 13ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

ஒதிசா சட்டப்பேரவைக்கு நான்கு கட்டங்களாக மே 13, 20, 25, ஜூன்1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.