டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ்குமார் குமார் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீடு உட்பட கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.