சிரஞ்சீவி,பவான் கல்யாண் இருவரையும் அனைத்துக் கொண்ட பிரதமர் மோடி 
இந்தியா

துணைமுதல்வர் ஆனார் பவன் கல்யாண்!

Staff Writer

ஆந்திரப்பிரதேசத்தின் துணைமுதலமைச்சராக ஆகியுள்ளார், நடிகர் பவன் கல்யாண்.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இதில், 135 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும், 21 இடங்களில் ஜனசேனா கட்சியும், 8 இடங்களில் பா.ஜ.க.வும் வெற்றிபெற்றன.

விஜயவாடா, கன்னவரம் விமான நிலையம் அருகே நடைபெற்ற சந்திரபாபு அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜே.பி. நட்டாவுடன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உட்பட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் சந்திரபாபு உட்பட்ட அனைத்த அமைச்சர்களுக்கும் ஆளுநர் நசீர் அகமது பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். சந்திரபாபுவுக்கு அடுத்ததாக ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்று முடிந்தவுடன் பிரதமர் மோடியிடம் வாழ்த்துப்பெற்ற பவன் கல்யாண், மேடையிலிருந்தவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

அப்போது, மேடையிலிருந்த தன் அண்ணன் நடிகர் சிரஞ்சீவியின் காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசிர்வாதம் பெற்றார்.