பத்துக்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்படுத்திய பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேசியப் புலனாய்வு முகமை- என்.ஐ.ஏ. இன்று இரவு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மார்ச் முதல் தேதியன்று நிகழ்ந்த அந்தக் குண்டுவெடிப்பில், சந்தேக நபரான முசம்மில் சரீப் என்பவரே இப்போது கைதாகியுள்ளார். இந்தச் செயலில் இவர் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என என்.ஐ.ஏ.தெரிவித்துள்ளது.
முதன்மை சந்தேக நபரான முசவீர் சசீப் உசேன் என்பவரே குண்டுவெடிப்பில் நேரடியாக ஈடுபட்டார் என்றும் என்.ஐ.ஏ. கருதுகிறது.
இதில் குற்றம்சாட்டப்படும் அப்துல் மதீன் தாகா என்பவர் உட்பட மூவரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. தேடுதல் சோதனைகளை மேற்கொண்டது.
தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரப்பிரதேசம் என 18 இடங்களில் தேடுதல் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.