ஆர்.எஸ்.எஸ்.சில் சேரத் தடை நீக்கம் 
இந்தியா

ஆர்.எஸ்.எஸ்.சில் அரசு ஊழியர் சேரத் தடை இல்லை- மத்திய அரசு!

Staff Writer

நாடளவில் ஆர். எஸ். எஸ். எனப்படும் இராஷ்ட்ரிய சுய சேவை சங்கம் அமைப்பில் சேருவதற்கான தடை எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசத்தந்தை காந்தியடிகள் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது. அதன்பிறகும் அவ்வமைப்பின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு, பொதுத் துறை ஊழியர்கள் அந்த அமைப்பில் அதிகாரபூர்வமாக சேரத் தடை விதிக்கப்பட்டது. 

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மூன்றாவது முறை பதவியேற்றதைத் தொடர்ந்து, முன்னர் விதிக்கப்பட்ட தடையை நீக்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மத்திய பணியாளர்தேர்வு, பயிற்சித்துறை கடந்த 9ஆம் தேதியன்று இதற்கான ஆணையை வெளியிட்டது. 

அந்தத் துறையின் துணைச்செயலாளர் கையொப்பமிட்ட சுற்றறிக்கை, அனைத்து மைய அமைச்சகங்கள், துறைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நேற்றுமுதல் நாடளவில் வாத, பிரதிவாதங்கள் சூடாக நடந்துவருகின்றன.