2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது யார் தெரியுமா?
அவர் பெயர் ராகிபுல் ஹுசைன். காங்கிரஸ் வேட்பாளர்.
அசாம் மாநிலம் துப்ரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிட்டார். இவருக்கு அடுத்த இடம் பெற்றவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் என்பவர்.
இவரை விட 10 லட்சத்து 12 ஆயிரத்து 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் ராகிபுல் ஹுசைன்.
இத்தொகுதியின் மொத்த வாக்குகள் 24 லட்சத்து 53 ஆயிரத்து 608 ஆகும்.
92.08 சதவீத வாக்குகள் பதிவாயின. இவர் பெற்ற வாக்குகள் மொத்த எண்ணிக்கை: 14.71 லட்சம். ராகிபுல் ஹுசைன், அசாம் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்.
நாட்டிலேயேயே மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பவர் ரவீந்திர வைகர். இவர் வடமேற்கு மும்பை தொகுதியில் ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா பிரிவு வேட்பாளராப் போட்டியிட்டார்.
இவர் வெற்றி வித்தியாசம் வெறும் 48 வாக்குகள்தான்! இந்த குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி வாய்ப்பை இழந்த துரதிருஷ்ட சாலி சிவசேனா உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த வேட்பாளர் ஆவார். வெற்றி பெற்ற ரவீந்திர வைகர், மும்பையில் ஏற்கெனவெ எம்.எல்.ஏவாக இருப்பவர்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் தெரியுமா?
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 5 லட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றிய சசிகாந்த் செந்தில், 2019ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு வார் ரூம் பொறுப்பாளராக இருந்து உழைத்தவர் சசிகாந்த் செந்தில்.
திருவள்ளூரில் இவர் பெற்ற மொத்த வாக்குகள் எண்ணிக்கை: - 7 லட்சத்து 96 ஆயிரத்து 956