கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி, “என் பல வருட ஆசை நிறைவேறியது” என்று கூறியுள்ளார்.
குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகருக்கு, ஆழ்கடல் நீச்சல் உடைகளை அணிந்துகொண்டு பிரதமர் மோடி கடலுக்கு அடியில் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர், மயிலிறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்ததோடு தரைப்பகுதியை தொட்டு வணங்கினார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
துவாராக வழிபாடு குறித்து பேசிய பிரதமர் மோடி ”நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட காலத்திலிருந்து, அங்கு சென்று தரிசனம் செய்ய விரும்பினேன். பல வருடங்களாக இருந்த என் ஆசை நிறைவேறியது.” என்றார்.