மகாராஷ்டிரம் By फ़िलप्रो (Filpro) - File:India dark grey.svg, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=50750304
இந்தியா

மகாராஷ்டிரத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது- 20ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்!

Staff Writer

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு நாளைமறுநாள் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.

ஆளும் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடியும் மைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முக்கியமான பிரச்சாரகர்களாக பல்வேறு ஊர்களில் பொதுக்கூட்டம், பேரணிகள், சாலைக்காட்சிகளை நடத்தினார்கள். 

இதைப்போலவே, காங்கிரஸ் தலைவர் கார்கே, அதன் மக்களவைத் தலைவர் இராகுல்காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா உட்பட இந்தியா கூட்டணி தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர்.   

அந்த மாநிலத்தின் குறிப்பான விவகாரங்களைக் கையிலெடுத்து பா.ஜ.க. தரப்பு காங்கிரசைச் சீண்டியது. எதிர்த்தரப்போ மத்திய, மாநில பா.ஜ.க. அரசுகளின் செயல்பாடுகளை விமர்சித்து பிரச்சாரம் செய்தன. 

நாளைமறுநாள் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. 

அது முடிந்தபின்னர் இரண்டு மாநிலங்களிலும் வரும் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும்.