அரியானா - ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் 
இந்தியா

சட்டசபை தேர்தல் முடிவுகள்: அரியானாவில் பா.ஜ.க., ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் முன்னிலை!

Staff Writer

அரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

அரியானாவில் கடந்த 5 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. எனினும், இந்த தேர்தலில் வெற்றியைப் பெற காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.

இதில், அரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான முடிவை இன்று காலை 9.30 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில், கட்சிகள் பெற்ற முன்னிலை விவரம் தெரிய வந்துள்ளது. இதன்படி, பா.ஜ.க.-30, காங்கிரஸ்-28, ஐ.என்.எல்.டி.-1, சுயேச்சை வேட்பாளர்-1 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் 50 இடங்களிலும் பா.ஜ.க. 25 இடங்களிலும் பிடிபி 2 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram