ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை 
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நாளை முதல் கட்டத் தேர்தல்!

Staff Writer

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.  முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதைப்போல காங்கிரஸ் கட்சியிலும் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட்ட அக் கட்சியின் முன்னணி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர்கள் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, புதிதாக செல்வாக்கு பெற்றுள்ள
இன்ஜினியர் ரசீத் தலைமையிலான அவான் இத்திகார்ட் கட்சியின் தலைவர்களும் காஷ்மீர் முழுவதும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை நடைபெற இருக்கும் முதல் கட்டத் தேர்தலில் காஷ்மீர் பகுதியில் 16 தொகுதிகளும் ஜம்மு பகுதியில் எட்டு தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் சேச்சைகள் உட்பட 219 பேர் களத்தில் இருக்கின்றனர்.

பாதுகாப்பான வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram