ப.சிதம்பரம், பிரதமர் மோடி 
இந்தியா

’கவனித்தீர்களா... சில நாள்களுக்கு முன்வரை பா.ஜ.க. ஆட்சி… நேற்றிலிருந்து என்.டி.ஏ. ஆட்சி!’

Staff Writer

“சில நாட்களுக்கு முன்வரை ‘பா.ஜ.க. ஆட்சி’ என கூறியவர்கள், நேற்றிலிருந்து ‘என்.டி.ஏ. ஆட்சி' என கூறத் தொடங்கிவிட்டார்கள்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“மோடி அரசு போய்விட்டது. சில நாள்களுக்கு முன்வரை பா.ஜ.க. அரசு என்று கூறியவர்கள், நேற்றிலிருந்து என்.டி.ஏ. அரசு என கூறத் தொடங்கிவிட்டார்கள். ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடந்துவரும் மாற்றங்களை நீங்கள் கவனித்தீர்களா?

ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மோடி நிராகரித்து வந்தார். ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளது. நன்றி பிரதமரே!" என்று சிதம்பரம் கூறியுள்ளார்.