இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி 
இந்தியா

சந்திராயன்-3 கவுண்ட்டௌன் சொன்ன விஞ்ஞானி வளர்மதியின் குரல் காற்றில் கரைந்தது!

Staff Writer

சந்திரயான் - 3 விண்கலம் ஏவப்பட்டபோது அதற்கு கவுண்ட் டௌன் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 50. 

விஞ்ஞானி வளர்மதி, இந்திய விண்வெளிஆய்வுத்திட்டங்கள் பலவற்றிலும் முன்னணிப் பணியாற்றியுள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் விண்கலங்கள் ஏவப்படும்போது, கவுண்ட் டௌன் குரல் தரும் பொறுப்பும் வளர்மதிக்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் - 3 விண்கலமானது ஏவப்பட்டபோது விஞ்ஞானி வளர்மதிதான் அதற்கு கவுண்ட் டௌன் குரல் கொடுத்தார். 

சூலூர்பேட்டையில் உள்ள இஸ்ரோ குடியிருப்பில் வசித்துவந்த இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னை  தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு விஞ்ஞானி வளர்மதி உயிரிழந்தார். 

அவரின் மறைவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.