எஸ்எஸ்எல்வி டி-3 
இந்தியா

விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3!

Staff Writer

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து சுமாா் 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (இஒஐஆா்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (ஜிஎன்எஸ்எஸ்-ஆா்) மற்றும் சிக் யுவி டோசிமீட்டா்ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இஒஐஆா் கருவி பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க அனுப்பப்படுகிறது. ஜிஎன்எஸ்எஸ்-ஆா் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீா்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டா் விண்ணில் புற ஊதாக் கதிா்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும்.

இந்த ராக்கெட்டில் ஸ்பேஸ் கிட்ஸ் ஆப் இந்தியா ஸ்டாா்அஃப் நிறுவனம் வடிவமைத்துள்ள 200 கிராம் எடை கொண்ட ‘எஸ்ஆா்-டெமோசாட்’ எனும் நேனோ ஆய்வுக் கருவியும் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram