சோம்நாத், இஸ்ரோ தலைவர் 
இந்தியா

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு!

Staff Writer

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது என அவரே தெரிவித்துள்ளார். 

சூரியனை நோக்கிய ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட்ட அன்று எடுத்த பரிசோதனையில் இது தெரியவந்தது என்று பேட்டி ஒன்றில் சோம்நாத் கூறியுள்ளார். 

முன்னதாக, சந்திராயன் 3 ஏவுதலின்போது ஏதோ உடல் நலப் பிரச்னைகள் இருந்ததைத் தன்னால் உணரமுடிந்தது என்றும் ஆனால் அப்போது அது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதைப் பற்றிய தெளிவான முடிவும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியன்று ஆதித்யா எல்-1 ஏவப்பட்ட அன்று வழக்கமான உடல்நல சோதனை செய்துகொண்டதில், சோம்நாத்தின் வயிற்றில் புற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

அதன்பிறகு மேற்கொண்டு சோதனைகளுக்காக அவர் சென்னைக்கு வந்துள்ளார். இங்கு எடுக்கப்பட்ட சோதனையில் மரபுரீதியான நோய்த் தாக்கம் அவருக்கு இருந்தது உறுதியானது. அதற்காக அவர் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். கீமோதெரப்பி சிகிச்சையை அடுத்து, அவருக்கு  அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நான்கு நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் சோம்நாத் வீடு திரும்பினார்.

ஐந்தாவது நாளே தன்னால் பணிக்குச் செல்லமுடிந்தது என்றும் சோம்நாத் கூறியுள்ளார்.

தற்போது எந்த வலியும் இல்லாமல் பணியாற்ற முடிவது அவரின் நலம் மருத்துவ அதிசயம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.