வயநாடு நிலச்சரிவு: சூரல்மலை 
இந்தியா

புதைந்துபோனவர்களை சேட்டிலைட் மூலம் கண்டறிய முடியாது - இஸ்ரோ தலைவர்

Staff Writer

நிலச்சரிவில் புதையுண்டவர்களை கண்டுபிடிக்க விண்வெளி தொழில்நுட்பம் பயன்படாது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர் ஆறாவது நாளாக இன்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்துக்குள் புதியுண்டவர்களை கண்டறிய நவீன ரேடார் கருவிகளை ராணுவம் பயன்படுத்த உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அழிபாட்டுக்கு அடியில் புதைந்து கிடைக்கும் பொருட்களை விண்வெளி தொழில்நுட்பத்தால் கண்டறிவது சிரமம். ரேடார் சிக்னல் ஒரு குறிப்பிட்ட ஆழமாம்தான் செல்லும். பூமிக்கு அடியில் பெட்ரோலியம் போன்ற திடப்பொருள்கள் இருப்பதால் விண்வெளி தொழில்நுட்பத்தால் கண்டறிய முடியாது.”என்றார்.

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 206 பேர் காணவில்லை கூறப்படுகிறது. ஆறாவது நாளாக இன்றும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram