புதுடெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முக்கிய ஆவணங்கள் எரிந்ததா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.
புதுடெல்லி ஐ.டி.ஒ. பகுதியில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் 4ஆவது மாடி கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்டடங்களில் மேல்மாடியில் இருந்த பணியாளர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியேறினர். மேலும், அலுவலகத்தில் பற்றி எரிந்த தீயை 21 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி அணைத்தனர்.
இருப்பினும், அங்கு கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்த ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்தத் தீவிபத்தில் ஆவணங்கள் பாதிப்புக்கு உள்ளாகினவா என்பது பற்றிய விவரம் உறுதிப்படுத்தவில்லை.