தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு, மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, பிரசார பணிகள் உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரசாரங்களை மேற்கொள்ள ஏதுவாக சச்சின் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.