கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான மைசூர் நில விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரிக்க அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர் மீது கடந்த வாரம் ஊழல் தடுப்புச் சட்டப்படி வழக்கு பதியப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அவர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்துள்ளது.
இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது ஊழல் தடுப்புச் சட்டப்படி வழக்குப் பதிய பெங்களூர் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஒரே நாளில் இரு வேறு உத்தரவுகள் வந்துள்ளது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.