புதிதாக உருவாகும் டானா புயல் வரும் 24ஆம்தேதி ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களையொட்டு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கணிக்கப்பட்டபடி, வடக்கு அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவானது. இது இரண்டு நாள்களில் புயலாக வலுப்பெறும்.
அதற்கு டானா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இதனால் குறிப்பான பாதிப்புகள் இருக்காது என்றாலும் வழக்கமான பருவ மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை மாற்றங்களையொட்டி புதிய அறிவிப்புகள் வெளியாகும்.