இந்தியா

முதல்வர் பதவி- சந்திரசேகர் ராவ், அசோக் கெலாட் விலகல்!

Staff Writer

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து தெலங்கானாவின் கே.சந்திரசேகரும், ராஜஸ்தானின் அசோக் கெலாட்டும் விலகியுள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.

பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியைத் தழுவியநிலையில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கே.சந்திரசேகர் ராவ் முறைப்படி ஆளுநர் தமிழிசைக்குக் கடிதம் அனுப்பினார். அவரின் விலகலை ஏற்றதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

இதேபோல், ராஜஸ்தானிலும் பா.ஜ.க.100-க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட் தன் விலகல் கடிதத்தை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அளித்தார்.